ம.வே.சிவகுமார்
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரும் நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான ம.வே. சிவகுமார் (61) காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் மிகுந்திருந்த இவரது எழுத்துப்பயணம் கணையாழியில் துவங்கியது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, தினமணி கதிர், ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் வாசக கவனம் பெற்றன. நாடகத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் பல நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கினார். தொலைக்காட்சித் தொடர்களுக்கும் கதை-வசனம் எழுதினார். திரைப்படத்துறைமீது கொண்ட ஆர்வம் காரணமாக அத்துறையிலும் கால் பதித்தார். அங்கு இவருக்குக் கிடைத்த அனுபவங்கள் தீரா மன அழுத்தத்தை உண்டாக்கின. புகைப்பழக்கமும் மன அழுத்தமும் இவரை இதய நோயாளியாக்கின. திரைப்படத்துறையில் சாதித்தே தீருவேன் என்ற இலட்சியத்துடன் இயங்கி வந்த இவர் திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ம.வே.சிவகுமார் பற்றி வாசிக்க

© TamilOnline.com