கணிதப் புதிர்கள்
1. ஒரு கூடையில் நூறு மாம்பழங்கள் இருந்தன. அவற்றை சங்கர், சாமி, காயத்ரி, மாலா ஆகிய நால்வரும் பங்கு போட்டுக்கொண்டனர். மாலாவிடம் இருந்த மாம்பழங்களை விட சங்கர் எட்டு பழங்கள் அதிகம்

வைத்திருந்தான். காயத்ரியிடம் இருந்த பழங்களை விட எட்டு பழங்களை அதிகமாகச் சாமி வைத்திருந்தான். சாமியிடம் இருந்ததை விட மாலா எட்டு பழங்களை அதிகம் வைத்திருந்தாள். அப்படியென்றால்

ஒவ்வொருவரிடமும் இருந்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

2. 1, -2, 2, -4, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

3. ஒரு வியாபாரி அரிசிமூட்டை ஒன்றை வாங்கினார். அவர் வாங்கியதும் அதன் விலை 30% அதிகரித்து விட்டது. விற்கும்போது அதன் விலை 30% சரிந்துவிட்டது. அவருக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?

4. 111
--------- = 37 இது சரியா? எப்படி?
III

(புதிர் எண் நான்கை எழுதி அனுப்பியவர்: முனைவர் கிருஷ்ணவேணி அருணாசலம், போர்ட்லாண்ட், ஓரிகன்)

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com