அன்விதா பிரபாத்
டெக்சஸைச் சேர்ந்த நான்கே வயதான அன்விதா பிரபாத் ஆத்திசூடியின் 109 செய்யுள்களையும் முழுமையாகச் சொல்லி 5 வயதுக்குக் கீழானோர் பிரிவில் முதற்பரிசைத் தட்டிச் சென்றார். ஜனவரி 23, 2016 அன்று ப்ளேனோவில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்திய தமிழ் ஆராதனை விழாப் போட்டிகளில் 109 செய்யுள்களையும் மனப்பாடமாகக் கூறிய முதல் சிறுமியும் இவர்தானாம். இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் அன்விதா!

தென்றல்

© TamilOnline.com