GOD: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிட்டியின் ஏற்பாட்டில் நடைபெறும் திரு. M.K. ராமானுஜம்ஜி அவர்களின் சொற்பொழிவுகள் பற்றிய விவரங்கள்:

2015 அக்டோபர் 10 முதல் 15 வரை டெட்ராய்ட் ஸ்ரீ பாலாஜி கோவிலில் 'பக்த சரித்திரம்' என்னும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. பல பக்தர்கள் மற்றும் மகான்களின் சரித்திரங்களை இதில் ராமானுஜம்ஜி விளக்கமாகக் கூறினார். அக்டோபர் 11ம் தேதியன்று 'ராதா கல்யாணம்' நடைபெற்றது.

அக்டோபர் 16 முதல் 20 வரை 'சம்பூர்ண கிருஷ்ணகதா' என்னும் தொடர் சொற்பொழிவு ஆர்லாண்டோவில் உள்ள காசெல்பெரி கோவிலில் நடைபெற்றது. தமது சொற்பொழிவுகள் மூலம் அவர் பிருந்தாவனத்துக்கும் கோகுலத்துக்கும் பக்தர்களை கொண்டு சென்றுவிட்டார் என்றால் மிகையல்ல. நிகழ்ச்சியில் ஸ்ரீ மகாரண்யம் முரளீதர சுவாமிஜியின் மதுரகீதங்கள் பாடப்பட்டன. மேலும், கோபகுடீரம் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அக்டோபர் 18ம் தேதியன்று 'ராதா கல்யாணம்' திரு. மதன்கோபால் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமானுஜம்ஜி, ஸ்ரீ முரளீதர சுவாமிஜியின் மூத்த சீடர்களில் ஒருவர். GOD USA அமைப்பின்மூலம் சாந்தீபனி குருகுலம் வேத பாடசாலைகளை பல ஊர்களில் இயக்கிவருகிறது. இவற்றுக்கு ஆதரவு தர விரும்புவோர் தொடர்புகொள்ள:

தொலைபேசி: 18304GODUSA
வலைமனை: www.godivinity.org

ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com