நார்த் பே ஹிந்துக் கோவில்: 'சன்ஸ்கிருதி 2016'
ஜனவரி 31, 2016 அன்று நார்த் பே ஹிந்து மையம் துர்கா-லக்ஷ்மி-சரஸ்வதி கோவில் ஒன்றைக் கட்டுவதற்கான நிதி திரட்டும்பொருட்டு 'சன்ஸ்கிருதி 2016' என்ற கலைநிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்தக்

கோவில் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், கலை கலாசார மையமாகவும் திகழவேண்டுமென்பது ஹிந்து மைய அமைப்பாளர்களின் விருப்பமாக உள்ளது. இந்த மையம் 501(c)(3) வரிவிலக்குப் பெற்ற

லாபநோக்கற்ற அமைப்பாகும்.

இதற்காக, சங்கம் ஆர்ட்ஸ் அமைப்புடன் இணைந்து முதல் வருடாந்திர இந்திய கலாசார இசை மற்றும் நாட்டிய விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சிகளாவன:
அர்ஜுன் வர்மா - சிதார்
காயத்ரி கௌண்டின்யா - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு
நவா டான்ஸ் தியேட்டர் - பரதநாட்டியம்
சித்ரேஷ் தாஸ் டான்ஸ் கம்பெனி - கதக்
விஷ்ணு தத்வ தாஸ் - ஒடிசி
யுஃபோரியா - இளைஞர் கலைக்காட்சி (குரு ஷ்ரத்தா, கதகர்ஸ் ஸ்கூல் ஆஃப் டான்ஸ், மாதுரி கிஷோர் குச்சிபுடி ஸ்கூல், நவியா டான்ஸ் அகடமி)
இடம்: Marin Showcase Theater at Marin Civic Center (10 Avenue of the Flags, San Rafael, CA 94903)
நுழைவுச்சீட்டு: $55 (முன்கூட்டி வாங்கினால் தள்ளுபடி உண்டு)

நன்கொடை வழங்குவோருக்கு இலவச அனுமதி உண்டு.
முழு விவரங்களுக்கு: www.northbaytemple.org

ராதிகா சீதாராமன்,
நார்த் பே, கலிஃபோர்னியா

© TamilOnline.com