கரையோரம்


மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் கரையோரம். கணேஷ், நிகிஷா பட்டேல், இனியா, ராதாரவி, மனோபாலா, சிங்கம் புலி, முத்துக்காளை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுஜித் ஷெட்டி இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.கே.எஸ். "பத்து நிமிடத்துக்கு ஒருமுறை உங்களைப் பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் இது. மிகப்பெரிய தொழில்நுட்பக் குழுவைக் கொண்டு உருவாக்கியுள்ளோம். கடற்கரையோர ரிசார்ட்டுக்கு நிகிஷா பட்டேல் காதலன் கணேஷுடன் செல்கிறார். அங்கே பேய் உருவத்தில் இனியா அவர்களை டார்ச்சர் செய்வார். தொடர்ந்து பல கொலைகளும் அங்கே நடக்கும். போலீஸ் அதிகாரி சிம்ரன் அங்கே விசாரணைக்கு வருவார். கொலையாளிகளை எப்படிக் கண்டறிகிறார் என்பதுதான் கதை" என்கிறார் இயக்குனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com