டாலஸ்: 4 தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதியுதவி
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவி திருமதி. கீதா அருணாச்சலம் அவர்களின் முயற்சியில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகாடமி டெக்சஸின் டாலஸ் பகுதியில் தொடங்கப்பட்டது. ஆலன் (டெக்சஸ்) தமிழ்ப்பள்ளியை 2014ல் அது தொடங்கியது. பின்னர் மர்ஃபி, ஃப்ளவர் மௌண்டு, ஃப்ரிஸ்கோ/லிட்டில் எல்ம் பகுதிகளிலும் பள்ளிகளைத் தொடங்கியது. CTA பாடத்திட்டத்தை அனுசரிக்கும் இப்பள்ளிகளில் இப்போது 200 மாணவர்கள் உள்ளனர்.

சென்ற இதழில் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை அறிவித்ததற்கிணங்க நிதியுதவி கோரித் தலைவர் கீதா 4 பள்ளிகளுக்கும் விண்ணப்பித்திருந்தார். அதன்படி தலா $1,500 வீதம் மொத்தம் $6,000 தொகையை அறக்கட்டளை அறங்காவலர்கள் 2015-16 கல்வியாண்டுக்கு வழங்க இசைந்துள்ளனர். மீண்டும் அடுத்த கல்வியாண்டுக்கு விண்ணப்பிக்க இதில் 3 பள்ளிகள் தகுதிபெறும்.

தமிழ்ப்பள்ளிகள் இந்த நிதிநல்கைக்கு விண்ணப்பிக்க விரும்பினால்
தகவல்:
விண்ணப்ப படிவம்:
www.tamilonline.com/tolfoundation/form.pdf

© TamilOnline.com