NETS: குழந்தைகள் விழா
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம், நவம்பர் மாதம் குழந்தைகள் விழாவை, டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் "சிறகுகள்" என்று பெயரிட்டுக் கொண்டாடியது.

மாறுவேடம், தனித்திறன் நிகழ்ச்சி, திருக்குறள் போட்டிகளுடன் 'வார்த்தை விளையாட்டு', 'தமிழ் இசை', 'தமிழ் நாடகம்' மற்றும் 'தமிழ் நடனம்' ஆகியவை இடம்பெற்றன.

பாஸ்டனின் இசை மற்றும் நடனப் பள்ளி ஒவ்வொன்றுக்கும் பத்து நிமிடம் அளித்து குழந்தைகளின் திறமைகள் மேடையேற்றப்பட்டன. ரூபா குழுவினரின் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை நடனம்

அருமை. கோலம் நடனப்பள்ளி (சுஜா மெய்யப்பன்), லயா நடனப்பள்ளி (அனுராதா சுரேந்திரன்), நாட்டியமணி நடனப்பள்ளி (ஸ்ரீதேவி திருமலை) ஆகியவற்றின் பரதநாட்டியம் கரவோசையை அள்ளியது. இசைப்

பள்ளிகளான ஷண்முகப்ரியா (ப்ரியா ஆனந்தி),
சுருதிலயா இசைப்பள்ளி (உமா சங்கர்), தேவி சுந்தரேசன் குழுவினரின் இசை காதுகளுக்கு இனிமை அளித்தது.

சிசுபாரதி பள்ளியின் (உமா நெல்லையப்பன்) குழந்தையின் 'கொடிகாத்த குமரன்' நாடகம், கலைமகள் தமிழ்ப்பள்ளியின் (தேவி மற்றும் ரூபா) குழந்தைகளின் நாடகமும் சிறப்பாக இருந்தன.

'வார்த்தை விளையாட்டு' நிகழ்ச்சியின் பாடத்திட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. (இணையத்தில் பார்க்க) சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களை தலைவர் பமிலா வெங்கட்

அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்தவர்கள் பூங்குன்றன் வி., முகுந்தன், சாந்தி மற்றும் செந்தில்ராஜா.

சரோஜ் பமீலா,
பாஸ்டன், மசாசூசெட்ஸ்

© TamilOnline.com