நகைச்சுவைப் பாத்திரத்தில் ஸ்ரீகாந்த்!
'பம்பர கண்ணாலே' ஸ்ரீகாந்த் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். இப்படத்தில் முதன்முதலாக நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். தனக்குப் பெரிய திருப்பத்தை இப்படம் ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

அண்ணாமலை பிலிம்ஸ் (பி) லிட். பட நிறுவனத்தின் சார்பில் செந்தில்-கணேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் முதல் படம் 'பம்பர கண்ணாலே'. இப்படத்தில் ஸ்ரீகாந்திற்கு இணையாக வருகிறார் ஆர்த்தி அகர்வால். படத்திற்கான கதை, திரைக்கதை, இயக்கத்தை கவனித்து வரும் பார்த்தி பாஸ்கர் இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உருவாகிறது 'பம்பர கண்ணாலே'.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com