GOD: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
ஸ்ரீ ஸ்ரீ மஹாரண்யம் முரளீதர சுவாமிகளின் மூத்தசீடர்களில் ஒருவரான திரு. ராமானுஜம்ஜி தற்சமயம் சியாட்டிலில் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். குளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிடி (GOD) சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி மற்றும் ஹூஸ்டனில் நடத்தவிருக்கும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

டிச. 2 - 8 சியாட்டில் வட்டாரத்தில் பாகவத சத்சங்கங்கள்
டிச. 10 - 16 சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி ஃப்ரீமான்ட் சித்திவிநாயகர் கோவிலில் பாகவத சப்தாஹம்; தவிர CET தியேட்டரில் திருமதி. இந்துமதி கணேஷின் நிரித்யோல்லாசா நடனப் பள்ளி வழங்கும் நிதி திரட்டும் கலைநிகழ்ச்சி நடைபெறும்.
டிச. 19 - 27 ஹூஸ்டன், மன்வெல் நாமத்வாரில் மதுர உத்சவம்

இதற்குமுன் ராமாநுஜம்ஜி அவர்களின் சொற்பொழிவுகள் ஃப்ளோரிடா, டெட்ராயிட், மேரிலாந்து, அட்லாண்டா, டாலஸ் நகரங்களில் நடைபெற்றன. வேத பாடசாலைகள், கோவில் திருப்பணிகளுக்கு குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி தொண்டாற்றி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள்மூலம் திரட்டப்படும் நிதி திருப்பணிகள் தவிர மருத்துவ முகாம்கள், இலவச மருத்துவ சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது. நிகழ்ச்சிகளில் பங்காற்றவும், ஸ்பான்சர் செய்யவும், இயன்ற உதவி செய்யவும் விரும்புவோர் தொடர்புகொள்க.

வலைமனை: www.godivinity.org
மின்னஞ்சல்: contact@godivinity.org
தொலைபேசி: 18304GODUSA

சொற்பொழிவுகளுக்கு அனுமதி இலவசம்.

© TamilOnline.com