'சம்திங்..சம்திங்.. உனக்கும் எனக்கும்'!
இது ஒரு புதிய படத்தின் பெயர்!

தில், யூத் படங்களைத் தயாரித்த டி.ராமாராவும், ஜெயம் படத்தைத் தயாரித்த எடிட்டர் மோகனும் இணைந்து தயாரிக்கும் புதிய படமொன்றுக்கு 'சம்திங்...சம்திங்.. உனக்கும் எனக்கும்...' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகன் ரவி, நாயகி த்ரிஷா. இவர்களுடன் சந்தானம், ரிச்சா பலோட், கீதா, சச்சு முதலியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை இயக்கப்போகும் எம். ராஜா, 'ஜெயம்', 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களை இயக்கியவர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com