மருதாண்ட சீமை


மகேந்திரன், குமரன் நாயகர்களாகவும், பல்லவி நாயகியாகவும் நடிக்கும் படம் மருதாண்ட சீமை. இவர்களுடன் சுப்பு பஞ்சு, அமுதவாணன், ஆர்.வி.உதயகுமார், நிரோஷா, பாடகர் வேல்முருகன், சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நவீன் ஷங்கர் இசையமைக்க, வெற்றி மகாலிங்கம் இயக்குகிறார். "இந்தப் படம் ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் அல்ட்ரா மாடர்ன் வில்லேஜ் படமாக வளர்ந்து வருகிறது. படத்தின் இரண்டு பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறோம்.. விரைவில் படம் வெளியாகவுள்ளது" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com