சரத்குமாரின் நூறாவது படம்
ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்க, சரத்குமார் நடிப்பில் உருவாகிறது 'தலைமகன்'. படத்திற்கான பூஜை சென்னை மெரீடியன் ஓட்டலில் அண்மையில் நடைபெற்றது.

இப்படத்திற்கான கதை வசனத்தைக் காவேரி வேந்தன் கவனிக்க, திரைக்கதையைச் சேரன் எழுதுகிறார். வைரமுத்து, வாலி பாடல்களுக்கு ஜே. பால் இசையமைக்கிறார். ஆர்.டி. பாலாஜி இயக்குகிறார்.

'ஐயா' படத்திற்குப் பிறகு சரத்குமார், நயன்தாரா ஜோடி இப்படத்தில் மீண்டும் இணைகிறது. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சீமாபிஸ்வாஸ், வடிவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்.

'தலைமகன்' சரத்தின் 100வது படம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com