ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி!
'சந்திரமுகி' வெற்றிகரமாக ஓடித் தமிழ்த்திரை உலகில் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தைப் பற்றிய செய்திகள் யூகங்களாக வந்து கொண்டிருந்தன. பழம்பெரும் நிறுவனமாக ஏ.வி.எம். நிறுவனத்தினர், 'அந்நியன்' இயக்குநர் ஷங்கர், ரஜினி கூட்டணியில் தனது 168வது படத்தை தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மாராட்டிய சிங்கம் 'சிவாஜி' பெயரைக் கொண்டு தயாரிக்கப்படும் இப்படத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட உள்ளார் என்றும், பல கோடி சம்பளம் ரஜினிக்கு பேசப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com