கோகுல் & சிரில்
பெரூவிலுள்ள லிமாவில் 2015 நவம்பர் 10-14 தேதிகளில் நடந்த உலக ஜூனியர் இறகுப்பந்தாட்ட (ஷட்டில் பேட்மின்டன்) சேம்பியன்ஷிப்பில் அமெரிக்காவின் பிரதிநிதியாக விளையாட கோகுல் கல்யாணசுந்தரம்

தகுதிபெற்றுப் பங்கேற்றார் (பார்க்க: தென்றல், ஆகஸ்ட் 2015;). இத்தகைய ஜூனியர் சேம்பியன்ஷிப் ஆட்டக்காரர்களிலிருந்துதான்

பின்னர் உலக சேம்பியன்கள் முகிழ்க்கிறார்கள். தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் போன்றவற்றில் ஜூனியர் சேம்பியன்ஷிப் தகுதியை வெல்ல உலகின் 50 நாடுகளிலிருந்து இளையோர் பங்கேற்றார்கள்.

ஆடவர் இரட்டையில் பங்கேற்க கோகுல் தனது ஜோடியான பிரையன் டுவோங்குடன் தகுதி பெற்றிருந்தார். தொடக்க நிலையிலேயே உலகப் போட்டியில் இவர்கள் தோற்றபோதும், அமெரிக்காவிலிருந்து உலக அளவில்

பங்கேற்கத் தகுதிபெற்ற முதல் ஆசிய இந்தியர் இவராகத்தான் இருப்பார். இந்திய ஜோடியான M.R. அர்ஜுன், சிராக் ஷெட்டியிடம் இவர்கள் தோல்வி கண்டனர்.

ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிரில் வர்மா இறுதிச் சுற்றுவரை சென்று, இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து, மலேசியா, டென்மார்க் போன்ற நாடுகளின் வலுவான

ஆட்டக்காரர்களை வென்றே அவர் இதனைச் சாதிக்க முடிந்தது. வரும் ஆண்டுகளில் கவனிக்கப்படத் தக்கதோர் வீரராக இவர் இருப்பார் என்பதில் ஐயமில்லை.

இன்னும் உயரங்களை எட்ட கோகுல், சிரில் இருவருக்கும் தென்றலின் வாழ்த்துக்கள்!

தென்றல்

© TamilOnline.com