Access Braille: 'அந்தர்ஜோதி'
அக்டோபர் 2, 2015 அன்று மில்பிடாஸ் ஜெயின் மையத்தில் 'அந்தர்ஜோதி என்ற இசைநிகழ்ச்சி, அக்சஸ் பிரெய்ல் அமைப்புக்கு நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முக்கிய நிகழ்வாக திருமதி. ஆஷா ரமேஷ் அவர்களின் கச்சேரி இடம்பெற்றது. திரு. விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்), திரு. ரவி குடாலா (தபலா) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.

நிறுவனத்தின் இயக்குனர் திருமதி. சுதா ராஜகோபாலன் சென்ற ஆண்டுச் செயல்பாடுகளையும், பார்வையற்றோருக்கு பிரெய்ல் வடிவில் நூல்களைத் தருவது எத்தனை அவசியம் என்பது குறித்தும் விளக்கினார். (பார்க்க: தென்றல், ஏப்ரல் 2010). இதன் விரிவாக்கமாக அண்மையில் முப்பரிமாண அச்சுப் பதித்த பொருட்களைப் பார்வையற்றோருக்குக் கொடுப்பதன்மூலம் அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளை விளக்க முயல்கிறதென்று கூறினார்.

அடுத்துவந்த ஆஷா ரமேஷ் இசைக்கச்சேரியில் கீர்த்தனைகள், அபங்கங்கள், வங்காளிப் பாடல்கள் என அரங்கைப் பக்திப்பெருக்கால் நிரப்பினார். அக்சஸ் பிரெய்லின் பணிகள் குறித்து மேலும் அறியவும் ஆதரிக்கவும்: www.accessbraille.org

விஜி திலீப்,
கூபர்ட்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com