டென்னசி: ஆதியோகி பிரதிஷ்டை
செப்டம்பர் 23, 2015 அன்று டென்னசியில் ஈஷா யோக மையத்தில், ஆதியோகி பிரதிஷ்டை செய்யப்பட்டது. செப்டம்பர் 22–24 தேதிகள்வரை நடைபெற்ற இந்த பிராணபிரதிஷ்டை நிகழ்வில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 30000 சதுர அடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

21 அடி உயரம், 30 டன் எடை கொண்ட, உலோகத்தில் வடிக்கப்பட்ட இச்சிலையை சத்குரு வடிவமைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில், உருவான இது அமெரிக்காவிற்கு கப்பலில் வந்தது. உலகுக்கு யோகக்கலையை வழங்கிய ஆதியோகிக்கு ஓர் அங்கீகாரமாகவும், நன்றியை வெளிப்படுத்தும் விதமாகவும் இவ்விடம் அமைகிறது. ஆதியோகிபற்றி அறிய அமெரிக்க தேசத்தில் இந்த நிகழ்வு ஏற்படுவதைப்பற்றி சத்குரு, "இந்த மூன்று நாட்களுக்கு இங்கே நிகழ்ந்தவைபோல பூமியின் இந்தப்பகுதி இதுவரை கண்டதில்லை. இது சக்திநிலையிலும் உங்கள் அனுபவத்திலும் இதுவரை நிகழ்ந்திடாத ஒன்று. வரலாற்றுப் புத்தகங்கள் அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. ஒருவர் ஞானோதயம் அடைவதைப் பதிவு செய்வதில்லை. சமூகத்தில் நிகழும் அழிவுகளை வரலாறு பதிவு செய்கிறது. அழகான ஒன்று ஏற்படுவதை வரலாறு பதிவு செய்வதில்லை! இங்கே நிகழ்ந்தது வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்படாது. ஆனால், இது வரலாறு காணாத நிகழ்வு" என்று கூறினார்.

அதிகத் தகவலுக்கு: tamilblog.ishafoundation.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com