'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம்
அக்டோபர் 3, 2015 அன்று மிச்சிகனின் School Of World Music & Dance அமைப்பு Seaholm High School வளாகத்தில் மாலை 4.00 மணிமுதல் 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகத்தை நடத்தவிருக்கின்றனர். இளங்கோ அடிகள் இயற்றிய 'சிலப்பதிகாரம்' காவியத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் ஆட்சிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்டைய தமிழரின் கலாசாரம், குன்றக்கூத்து, குரவைக்கூத்து, பரவைக்கூத்து, பரத்தையர்கூத்து, ஆய்ச்சியர்குரவை போன்ற பலவற்றையும் இது சித்திரிக்கிறது.

"நிருத்ய க்ஷேத்திரா டான்ஸ் அகாடமி"யை நடத்திவரும் திரு. மதுரை முரளிதரன் மற்றும் அவரது துணைவியார் சித்ரா முரளிதரன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்தப் படைப்பு. முப்பதுக்கும் மேலான கலைஞர்களுடன் தாமும் பங்கேற்று மிச்சிகனில் நடத்தவிருக்கிறார் உலக இசை நடனப்பள்ளியின் இயக்குநர் திருமதி. லலிதா ரவி. இவர் கடந்த வருடம் "சகி" என்ற நாட்டிய இசை நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார். தரமான ஆடையலங்காரம், ஒலி-ஒளியில் நூதன முயற்சிகள் எனப் பல அம்சங்கள் கொண்டு மேடைக்கு வருகிறது சிலப்பதிகாரம்.

வலைமனை: www.musicdanceart.com

காந்தி சுந்தர்,
டெட்ராய்ட், மிச்சிகன்

© TamilOnline.com