நவரச திலகம்
தொலைக்காட்சி புகழ் மா.கா.பா. ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் நவரச திலகம். நாயகி சிருஷ்டி டாங்கே. கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, மீரா கிருஷ்ணன், லஷ்மி உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு, மாறுபட்ட தோற்றத்தில் சித்தார்த் விபின் நடித்தும் இருக்கிறார். பாடல்கள் யுகபாரதி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன். இவர், இவர் ராஜ்கபூர், பூபதிபாண்டியன், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். "ஒவ்வொருவரைச் சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில நவரச திலகங்கள் இருப்பார்கள். அப்படி ஒரு நண்பனின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இந்தப் படம்" என்கிறார் இயக்குநர். படத்தில் நவரசமும் இருக்குமா?அரவிந்த்

© TamilOnline.com