வைகை எக்ஸ்பிரஸ்


ஆர்.கே. நாயகனாக நடிக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ். நாயகியாக நீது சந்திரா நடிக்கிறார். உடன் நிக்கி கல்ராணி, இனியா, சுஜா வாருணி, நாசர், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் கண்ணா, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஸ் இயக்கம். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி கலக்கலாக இருக்கும் என்கிறார் ஆர்.கே. இதற்காக அவர் அமெரிக்காவில் ஸ்பெஷல் டிரெய்னிங் எடுத்திருக்கிறார். முழுக்கதையும் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கிறது. வசனம் பிரபாகர். இசை தமன். நீது சந்திராவுக்கு இதில் இரட்டை வேடமாம். நான்ஸ்டாப் எக்ஸ்பிரஸ்.

அரவிந்த்

© TamilOnline.com