தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி
அமெரிக்கத் துணைக்கண்டத்தில் 15 ஆண்டுகளாகத் தமிழ்ச்சேவை செய்துவரும் தென்றல் இதழின் லாபநோக்கற்ற சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை (Tamilonline Foundation) புதிய தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி வழங்கவிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.

* பள்ளிகள் அமெரிக்காவில் (USA) தொடங்கப்பட வேண்டும்.
* தனிநபர், குழுக்கள், நிறுவனங்கள் என்று எவரும் தாம் தொடங்கப்போகும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம்.
* முன்னரே பள்ளி நடத்திவரும் அமைப்புகள் புதிய இடங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம்.
* பள்ளி தொடக்கத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு $1500க்கு மிகாமல் நிதியுதவி தரப்படும். இதை இடத்துக்கான வாடகை, பாடத்திட்டம் தயாரித்தல், பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி தொடங்குவதற்கான அடிப்படைச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.
* அறக்கட்டளை தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப நிதி வழங்கலைத் தீர்மானிக்கும்.
* நிதி வழங்குதல் குறித்த முடிவுகளில் அறக்கட்டளை நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது.

விண்ணப்பப் படிவங்களைத் தரவிறக்க
நிரப்பிய படிவங்களை 'New School Grant' என்ற பொருளில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com

தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை

© TamilOnline.com