சான் ஹோசே: எவர்க்ரீன் தமிழ்ப்பள்ளிக் கிளை ஆண்டுவிழா
மே 17, 2015 அன்று கலிஃபோர்னியா தமிழ்க்கழகத்தின் சான் ஹோசே எவர்க்ரீன் கிளை தமிழ்ப்பள்ளியின் ஒன்பதாவது ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா எவர்க்ரீன் வேல்லி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளிமுதல்வர் இல.தியாகராஜன் விழாவுக்குத் தொடக்கவுரை ஆற்றினார். பின்னர், மாணவ மாணவிகள் பாட்டு, நடனம், நாடகம் எனக் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.

மதிய நிகழ்ச்சியில் பள்ளி துணைமுதல்வர் பா. இலக்குவன் வரவேற்றுப் பேசினார். சான் ஹோசே Tom Matsumoto தொடக்கப்பள்ளி முதல்வர் ஜேம்ஸ் ஷெர்மன் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியருக்குப் பட்டமளித்து சிறப்புரையாற்றினார். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பதால் அறிவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் பெருகும் என்றும், முதுமையில் ஞாபக இழப்பு (Alzheimer's disease) போன்ற நோய்களைத் தவிர்க்க முடியும் என்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். CTA தலைவர் வெற்றிச்செல்வி இராஜமாணிக்கம், துணைத்தலைவர் ஆண்டி நல்லப்பன் ஆகியோர் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தார்கள்.

ரவிசங்கர் ஷண்முகம்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com