மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
2015 மே 30ம் தேதிமுதல், ஜூலை 20ம் தேதிவரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பல ஊர்களுக்கு வருகை தருகிறார். 'அரவணைக்கும் ஞானி' என்றழைக்கப்படும் அம்மா, மக்களின் துயர் துடைக்கத் தமது வாழ்நாளையும் முழுமையாக அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

ஊர்தேதி
சியாடல்05.30 - 06.01
சான் ஃபிரான்சிஸ்கோ- விரிகுடாப் பகுதி06.03 - 06.12
லாஸ் ஏஞ்சலஸ்06.14 - 06.18
ஸேண்ட ஃபே06.20 - 06.23
டாலஸ்06.25 - 06.26
அட்லாண்டா06.28 - 06.29
சிகாகோ07.01 - 07.03
வாஷிங்டன் டி.சி.07.05 - 07.06
பாஸ்டன்07.09 - 07.10
நியூ யார்க்07.12 - 07.14
டொரான்டோ, கனடா07.17 - 07.20


இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்பு, தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய www.amritapuri.org/activity
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com