தூங்கா வனம்


உத்தமவில்லன், பாபநாசம் படங்களை அடுத்துக் கமல் நடிக்கும் புதியபடம் தூங்கா வனம். இதில் நாயகிகளாக த்ரிஷா, மனீஷா கொய்ராலா, அனைகா ஆகியோர் நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதிரடி, ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தைக் கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்குகிறார். ஜிப்ரான் இசை. தீபாவளியன்று வெளியாகப்போகும் இப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவரும் கமலுடன் இணைந்து நடிக்கிறார் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. வனம் ஒருபோதும் தூங்காது!

அரவிந்த்

© TamilOnline.com