சிவப்பு


நவீன்சந்திரா நாயகனாகவும், ரூபா மஞ்சரி நாயகியாகவும் நடிக்கும் படம் சிவப்பு. முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, சோனா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷ், அல்வா வாசு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை சிநேகன் எழுத, இசையமைக்கிறார் என்.ஆர். ரகுநந்தன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சத்யசிவா. இப்படம் பற்றி அவர், "இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கி குடியுரிமைக்காக ஏங்குகிறவர்களின் வாழ்க்கைப் பதிவு சிவப்பு. இங்கிருந்து ஆஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தப்பிப்போக நினைத்து, அப்படிப் போகமுடியாதவர்களின் மனவலியையும் காதலையும் உள்ளடக்கிய கதை இது. இதில் அழகிய காதலும் இருக்கிறது. அடித்தட்டு மக்களின் வலியும் இருக்கிறது. படம் பார்க்கிற ஒவ்வொருவர் மனதையும் ஒரு நிமிடமாவது இப்படம் உலுக்கிவிடும்' என்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com