அதிபர்


நீண்ட இடைவெளிக்குப்பின் ஜீவன் நாயகனாகவும், வித்யா நாயகியாகவும் நடிக்கும் படம் 'அதிபர்'. இவர்களுடன் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சிங்கமுத்து, கோவை சரளா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை நா. முத்துக்குமார், விவேகா எழுத, இசையமைக்கிறார் விக்ரம்சிங்கா. மாயி, திவான், மாணிக்கம் போன்ற படங்களை இயக்கிய சூர்ய பிரகாஷ் இயக்குகிறார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் இப்படத்தில் நந்தாவுக்கு எதிர்நாயகன் வேடம் என்று கிசுகிசுக்கிறார் கோவிந்து. அதிபர் புதிய அதிகாரம் படைப்பாரா?

அரவிந்த்

© TamilOnline.com