தெரியுமா?: TNF: தமிழகத்தில் சேவைசெய்ய இளையோருக்கு வாய்ப்பு
அமெரிக்காவில் பிறந்து வாழும் தமிழ் இளையோர் சமூகசேவையில் ஈடுபடவும், தமிழகத்தைப்பற்றி அறியவும் ஒரு வாய்ப்பைத் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) கோடைமுகாம் திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்துகிறது. ஜூலை 18 முதல் 31 வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்த முகாம், சென்ற ஆண்டில் அமெரிக்காவிலிருந்து சென்று சமூகப்பணி செய்த ஆறு தமிழ் இளையோரின் கருத்துக்களையும், 41 ஆண்டுகளாக அறுநூறுக்கு மேற்பட்ட திட்டங்களை அமல்படுத்திய அனுபவத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்பும் இளையோர் தற்போது குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஓரளவு தமிழில் பேசமுடிவதும், தமிழகச் சூழலுக்கேற்ப வாழும் மனப்பான்மையும் முக்கியம். பின்வரும் கோடைமுகாம் மையங்களில் ஒன்று அல்லது இரண்டில் சேவை செய்யலாம்.

1. சென்னை மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குக் கற்பித்தல்.
2. திருவேற்காடு சுவாமி விவேகானந்தா கிராமப்புற சமுதாயக் கல்லூரியில் பள்ளிப் படிப்பைக் கைவிட்ட இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்.
3. வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி குருகுலத்தில் கிராமப்புறப் பின்தங்கிய மாணவிகளின் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வழிகாட்டுதல்.
4. காரைக்குடி, மதுரை, நாமக்கல், கடலூர், வேலூர் பகுதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளையின் TNF-ABC திட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் சேவை செய்தல்.
5. சீர்காழி 'அன்பாலயம்' மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவுதல்.
6. வேடந்தாங்கல் லயா அறக்கட்டளையின் கிராமப்புற முன்னேற்றத் திட்டத்தில் பங்காற்றுதல்.

அமெரிக்காவில் பயிலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள் தங்களது சமூகசேவை மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள இந்தச் சேவைமுகாம் ஒரு வாய்ப்பாக அமையும். மேலதிக விவரங்களுக்கும், விண்ணப்பங்களைப் பெறவும் இறுதிநாள்: மே 30, 2015.

தொடர்புக்கு
சோமலெ சோமசுந்தரம்
தொலைபேசி: 610-444-2628
மின்னஞ்சல்: tnf.philly@gmail.com
இணையதளம்: www.tnfusa.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com