பழுப்பரிசிப் பக்குவங்கள்
பழுப்பரிசி பொங்கல்

தேவையான பொருட்கள்
பழுப்பரிசி (brown rice) - 2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 3/4 கிண்ணம்
மிளகு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 8
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:
பழுப்பரிசியை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசனைவர வறுத்து அரிசியின் தண்ணீரை வடியவிட்டு அதனுடன் போட்டு குக்கரில் வேகவிடவும். 6 அல்லது 7 விசில் வந்ததும் எடுத்து வாணலியில் நெய்விட்டு முந்திரிப்பருப்பை வறுத்துக்கொண்டு மிளகு, சீரகம், பொடி செய்ததைப் போட்டு, பெருங்காயமும் போடவும். பிறகு வேகவைத்த அரிசி, பருப்பைப் போட்டு உப்பு, கறிவேப்பிலை போடவும். நன்றாகச் சேர்ந்து கொதித்ததும் கிளறி இறக்கி வைத்துச் சாப்பிடவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதோடு தக்காளிச் சட்னி பிரமாதமான ஜோடி!

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com