வெள்ள காக்கா மஞ்ச குருவி


கார்த்திக் தாஸ் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் படம் இது. நாயகியாக அனு கிருஷ்ணா நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். எஸ்.கே. முரளிதரன் எழுதி, இயக்குகிறார். கிராமத்தில் படித்த வேலை வெட்டி இல்லாத இளைஞனுக்குப் பணக்காரப் பெண்மீது காதல் வருகிறது. அந்தக் காதலினால் அவனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். பொறுப்பில்லாமல் இருந்த அவன், சமுதாயப் பிரச்சனை ஒன்றைக் கையிலெடுத்து ஜெயிக்கிறான். அதற்குப் பின் என்ன ஆகிறதென்று சொல்கிறது இப்படம். பாடல்களை எஸ்.கே. முரளிதரன், ஸ்ரீவிஜய், சதீஷ்காந்த் எழுத, ஜி. சாய்தர்ஷன் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com