திருட்டு பசங்க


சாட்டை படத்தில் நடித்த யுவன் நாயகனாகவும், திவ்யா நாகேஷ் நாயகியாகவும் நடிக்கும் படம் திருட்டு பசங்க. திருடர்களாகச் சபரி, முகேஷ், அரவிந்த் அறிமுகமாகின்றனர். முத்துக்காளை, சிசர் மனோகர், போண்டா மணி, ஷர்மிளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மதுரை ராஜமாணிக்கம் வில்லனாக அறிமுகமாகிறார். இதில் "கானா பாலா" ஒரு பாடலைப் பாடியிருப்பதுடன் நடிக்கவும் செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ். விஜய் பாலன் இயக்குகிறார். "யுவன் மற்றும் நண்பர்கள் சபரி, முகேஷ், அரவிந்த் நான்கு பேரும் ஊரில் வெட்டியாய் திரிகின்றனர். ஒன்றாகவே இருக்கும் இவர்கள், ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள். இதற்கிடையில், இவர்கள் காதலிக்கும் அந்தப் பெண் வெறு ஒருவரை காதலிப்பது தெரியவருகிறது. ஆத்திரத்தில் அந்த நபரை கொலைசெய்யத் திட்டமிடுகிறார்கள். திட்டம் என்ன ஆயிற்று என்பதை, சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர். சந்தேகமில்லாமல் திருட்டுப் பசங்கதான்.

அரவிந்த்

© TamilOnline.com