CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா)


திகில், த்ரில் என்ற சுவையான கலவை CSK. சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா என மூன்று கதாபாத்திரங்களின் பெயரையே தலைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ். சத்தியமூர்த்தி. இவர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சார்லஸாக ஷரணும், ஷஃபிக் ஆக மிஷால் என்ற புதுமுகமும், கார்த்திகாவாக ஜெய் குஹைனியும் நடித்திருக்கின்றனர். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் வசனத்தைப் பத்திரிகையாளர் கோவி. லெனின் எழுதியிருக்கிறார். "வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள மூவரின் வாழ்வை மாற்றும் ஒருநாள்தான் இந்த CSK. அந்த ஒருநாளை நினைவுகூர வைக்கும் CSK" என்கிறார் இயக்குநர் சத்தியமூர்த்தி. பாடல்கள்: பரமு. இசை: சித்தார்தா மோகன். ஒரிஜினல் CSKவுக்கு என்ன விளக்கம்னு தெரியாதவங்க கோலிவுட் கோவிந்தை ஃபோனில் கேட்கலாம்!

அரவிந்த்

© TamilOnline.com