டிமாண்டி காலனி


"வம்சம்", "மௌனகுரு" போன்ற படங்களில் நடித்த அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் டிமாண்டி காலனி. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து ஒரு திகில்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் அஜய்ஞானமுத்து. இவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளர். முக்கிய வேடங்களில் அபிஷேக், மதுமிதா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல கிதார் கலைஞர் கேபாஜெரேமியா இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆண்ட்ரியா ஜெரேமியா, இசையமைப்பாளர் அநிருத், டி. இமான் ஆகியோர் ஆளுக்கு ஒரு பாடல் பாடியுள்ளனர். விரைவில் வர இருக்கும் இப்படத்தில் நாயகி யார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளதாகக் காதைக் கடிக்கிறார் கோவிந்து. கத்திரிக்கா முத்தினா காலனிக்கு வராமயா போயிரும்!

அரவிந்த்

© TamilOnline.com