கள்ளப்படம்
மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'கள்ளப்படம்'. நான்கு இளைஞர்கள் அவர்களது முதல் பட வாய்ப்புக்காகச் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதை. ஸ்ரீராம் சந்தோஷ், காகின் ஆகியோருடன் இசையமைப்பாளர் கேயும் நடித்திருக்கிறார். நாயகி லட்சுமி ப்ரியா. ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 முதல் 12ம் தேதிவரையில் நடைபெறவிருக்கும் 'ரெவலஷன் பெர்த் சர்வதேச திரைப்பட விழா'விலும், செப்டம்பர் 11 முதல் 20 வரையில் நடைபெறவுள்ள 'மெல்போர்ன் அண்டர்கிரவுண்ட் திரைப்பட விழா'விலும் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசை: கே. தயாரிப்பு: மிஷ்கின்.



அரவிந்த்

© TamilOnline.com