தெரியுமா?: சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
எழுத்தாளரும், விமர்சகரும் மொழிபெயர்ப்பாளருமான சா. தேவதாஸுக்கு 2014ம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கபட்டுள்ளது. 'லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' (ஷேடோ ஓவர் லடாக்) என்ற பபானி பட்டாச்சார்யா நூலின் தமிழாக்கத்துக்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. டாக்டர் H. பாலசுப்ரமணியன், இந்திரன், டாக்டர் தமிழவன் கார்லோஸ் ஆகியோர் இப்படைப்பை விருதுக்காகத் தேர்ந்தெடுள்ளனர். கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தேவதாஸ், இதுவரை 25 நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். ஆறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபிவென்டேஸ் எழுதிய The Death of Artemio Cruz எனும் நாவலை மொழிபெயர்த்து வருகிறார். விருது, தாமிரப் பட்டயம், சால்வை, ரூ. 50,000 காசோலை ஆகியவற்றைக் கொண்டதாகும். ஆகஸ்ட் மாதத்தில் புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் விருது கையளிக்கப்படும்.



© TamilOnline.com