சிறுவர் தின விழா 2006
26 ஆண்டு கால தமிழ் மன்ற பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வளைகுடாப் பகுதி பெற்றோரும் சிறுவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறுவர் தின விழா இந்த ஆண்டு, கார்த்திகைத் திங்கள் 2ஆம் நாள் சனிக்கிழமை (நவம்பர் 18) 2 மணிக்கு, CET அரங்கம், சான் ஓசே -வில் நடைபெறுகின்றது.

இவ்விழாவில் சிறுவர்கள், தமிழில் மெல்லிசை, திரையிசை, நடனம், குறு நாடகம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று உங்களை மகிழ்விப்பார்கள். காணத் தவறாதீர்கள். உங்கள் குழந்தைகளையும், நண்பர்கள் குழந்தைகளையும் பங்கேற்க ஊக்கம் கொடுத்து பதிவு செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளின் திறமைகளை தமிழ் மன்ற மேடையில் கொண்டாட உடனே தமிழ் மன்ற உறுப்பினர் ஆகவும். விழாவில் பங்கேற்க பதிவு செய்யவும், மற்ற விவரங்களுக்கும்:

வலைத்தளம்: www.bayareatamilmanram.org
தொலை பேசி
டில்லி துரை - secretary@bayareatamilmanram.org - 408.513.7723
சுமதி நடேசன் - convener@bayareatamilmanram.org - 408.248.5211

தமிழ் மன்ற சுனாமி நிதியின் மூலம் கல்விப் பணி 2004 டிசம்பர் மாதம் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களை சீரழித்த ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட பேரழிவு என்றும் மறக்க முடியாத துக்க நிகழ்வு. 2005 பொங்கல் விழாவில் தமிழ் மன்ற புரவலர்கள் அளித்த $5,548 நிதியின் மூலமாக தென் தமிழகத்தின் வெம்பார் பகுதியில் பெரியசாமிபுரம், குஞ்சையாபுரம் மற்றும் முத்தயாபுரம் ஆகிய மூன்று கிராமங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தரமான கல்வி அளிக்க உள்ளது. இப்பணியை செவ்வனே செய்ய ஓஇந்திய கல்வி பணிஔ (India Literary Project - www.ilpnet.org) என்கிற சமூக சேவை அமைப்புடன் தமிழ் மன்றம் உடன்பாடு செய்துள்ளது. விடியல் டிரஸ்டு என்கிற சமூக அமைப்பு இப்பணியை நிறைவேற்ற உள்ளது.

© TamilOnline.com