Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
க்ரியாவின் 'மாயா'
FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை
'தில்லானா' வழங்கும் மண்வாசம்
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
'வாழும் கலை' வழங்கும் உலக அமைதிக்கு இசை
- |மார்ச் 2004|
Share:
Click Here Enlarge"காலை எழுந்தவுடன் படிப்பு - பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" என்று குழந்தைகளுக்காகப் பாடினான் பாரதி. பெரியோர்களாகிப் படிப்பை விடவில்லை, பாட்டை விட்டுவிட்டோம். இதை மீண்டு ஆக்கபூர்வமாக நினைவுறுத்த 'வாழும் கலை' (Art of Living) அமைப்பினர் உலக அமைதிக்கு இசை என்ற நிகழ்ச்சியை மார்ச் 7ம் தேதி அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இணையத்தில் வரும் ஊரெங்கும் நடக்கும் அநியாய, அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைப் படித்து பின்பு ஏற்படுகிறது சோர்வும், அவநம்பிக்கையும். 'உலகம் செல்கிறது உலகம்? இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லையா?' என்று தோன்றுகிறது. இதனால் செயலிழந்து விடுகிறோம்.

இச்சூழ்நிலையில் சராசரி மனிதனாகிய நாம் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டால், எதையும் செய்வதற்கு முன் நமக்குள் உற்சாகம் பொங்கவேண்டும். என்னால் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளை ஒழிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வளரவேண்டும். அந்த உற்சாகத்தைத் தினமும் நாம் உணர்வதற்கு நம்முள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு, பிறகு அதற்குள் அமைதி உண்டாகி, அந்த அமைதியில் மனம் திளைத்தால், அதை மற்றவர்க்கும் வெளியே அள்ளி வழங்க முடியும்.

அந்த ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்த மிக எளிமையான வழி இசை. இசை நம் மனதைக் கவர்ந்து உள்ளும் புறமும் அமைதியை நிலைநாட்டுகிறது. இசையில் நம்மை மறந்துவிட்டோம் என்றால் இசையின் ஆழத்தை நம்மால் உணரமுடியும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை உறுதியாக்கப் பன்னாட்டு இசையில், பன்மொழியில், வெவ்வேறு மதங்களிலிருந்து எல்லோரும் பாடும்படியாகப் பாடல்களை நம்முடன் பகிர்கிறார்கள். மனம் நெகிழ்ந்து சேர்ந்து பாடி, அமைதியை நிலைநாட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறவாதீர்கள்.

இடம்: Milpitas community center
457, E Calaveras Blrd,
Milpitas, CA 95035.
நாள்: மார்ச் 7, மாலை 5 - 7.
நுழைவுக் கட்டணம் கிடையாது.
விவரங்களுக்கு: artoflivingsfba.org
More

க்ரியாவின் 'மாயா'
FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை
'தில்லானா' வழங்கும் மண்வாசம்
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
Share: 




© Copyright 2020 Tamilonline