Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2003 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
- லலிதா ஆனந்த்|ஜூன் 2003|
Share:
Click Here Enlargeஸ்ரீமதி. ரோஸ் முரளிகிருஷ்ணன், ASHA-TARANGல் வழங்கிய இனிமையான இசை.

பிரபல கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கலைஞர் ஸ்ரீமதி. ரோஸ் முரளிகிருஷ்ணன் அவர்கள் மிக இனிமையான கச்சேரி ஒன்றை ஏப்ரல் 26, 2003 அன்று Tom Bradley International hall, UCLAல் நிகழ்த்தினார். இவரது இன்னிசை மழையில் நனைய ஆர்வம் கொண்ட அவரது ரசிகர்ளால் அரங்கமே நிரம்பி வழிந்தது. தன் இனிமையான குரலினாலும், ரிதத்தோடு இணைந்து பாடும் திறமையாலும், ஸ்ரீமதி. முரளிகிருஷ்ணன், அரங்கத்தில் கூடியிருந்தவர் களையெல்லாம் தன்வசம் கட்டிப்போட்டுவிட்டார் என்றே சொல்லலாம். வேகமாகவும், மெதுவாகவும், பிரபலமன மற்றும், எப்போதாவது கேட்கும் க்ரிதிகளை தன் கர்நாடக சங்கீதத்தில் மிக அருமையாகப் பாடியதிலிருந்து, ரோஸ் முரளிகிருஷ்ணன் கர்நாடக சங்கீதத்தில் தன் திறமையைத் தெளிவாகக் காட்டினார். ராகம் மற்றும் தாளத்தை அவர் பயன்படுத்திய விதம் அந்த மாலைப் பொழுதில் பொழுதுபோக்காக மட்டுமின்றி இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல பாடமாகவும் அமைந்திருந்தது.

கர்நாடக சங்கீதத்தின் எல்லா பார்வை களையும் எடுத்துக் காட்டி கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம் நிகழ்த்தப்பட்ட இது ஒரு முழுமையான கச்சேரி என்று தான் சொல்ல வேண்டும். ஸ்ரீமதி முரளிகிருஷ்ணன் கேந்திர கெளளை வர்ணத்தில் சிறப்பாகக் கச்சேரியைத் தொடங்கி, வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று காலத்தில் இல்லாமல் மிகவித்தியாசமாக ஆறுகாலத்தில் பாடி அசத்தினார். அதைத் தொடர்ந்து, முத்துசாமி தீட்சிதரின் கெளளை ராகத்தில், மிஸ்ராச்சப்பு தாளத்தில் அமைந்த ''ஸ்ரீ மஹாகணபதி ரவத்துமாம்'' மிக அருமை.

அதைத் தொடர்ந்து, கம்பீர நாட்டையில் மைசூர் சாம்ராஜ் உடையாரின் ஆதி தாளத்தில் அமைந்த ''ஸ்ரீ ஜலந்தர'' எல்லோரையும் கவரும் வகையில் துரித காலத்தில் கல்பனா ஸ்வரத்தில் கோர்வைகளோடு, அரிதான எடுப்புகளோடு பாடப்பட்ட ''கம்பீர நாட்டியா'' பார்வையாளர் களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்கு நேர் எதிர்மாறாக விளம்ப கால கீர்த்தனையோடு பூர்விகல்யாணி ராகத்தில் பாடப்பட்ட மைசூர் வாசுதேவாச்சாரின் ''மரசிதேவேமோ'' மிக மென்மையாக இருந்தது.

தொடர்ந்து பல தமிழ் கீர்த்தனைகளை அவருக்கே உரிய தனிச்சிறப்போடு, மிக இனிமையாகப் பாடினார் ஸ்ரீமதி. ரோஸ் முரளிகிருஷ்ணன். பிறகு ஒரு சிறிய இடை வேளைக்குப் பிறகு, அவர் பாடிய ''எல்லோரும் வாருங்கள்'' என்ற தமிழ்ப்பாடலில் (அபேரி ராகத்தில் ஆதிதாளத்தில் மிக அருமையாக இசையமைக்கப்பட்டது) தெரிந்த அவரது நகைச்சுவை உணர்வு பார்வையாளர்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது. ஹிந்துஸ்தாணி பாணியையும் லேசாகத் தொட்டுக் கொண்டு இவர் பாடிய தீட்சிதரின் லலிதா ராகத்தில் மிஸ்ராச்சப்பு தாளத்தில் அமைந்த ''அகஸ்தீஷ்வரம்'' பார்வையாளர்களின் உள்ளத்தைத் தொட்டது என்றே சொல்லலாம்.

இந்த இனிமையான மாலைப் பொழுது தோடியில் அமைந்த ராகம் தானம் பல்லவியோடு வழக்கத்திற்கு மாறான எடுப்போடு கன்டதிரிபுட தாளத்தில், அதைத் தொடர்ந்து ஸ்ரீராம் பிரம்மானந்தம் மற்றும் ரவீந்திர பாரதியின் மிக அருமையான தனி ஆவர்த்தனத்தோடும் மற்றும் சில மொழிபெயர்ப்புப் பாடல்களோடும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ஸ்ரீமதி முரளிகிருஷ்ணாவின் இசைக் கச்சேரியில் கொஞ்சம் அவரது குரு எம்.எல். வசந்தகுமாரி அவர்களின் சாயல் தெரிந்தாலும் தனக்கே உரிய தனி பாணியையும் இவர் இந்தக் கச்சேரியில் வெளிப்படுத்தித் திறமையாகக் கச்சேரியை நிகழ்த்திக்காட்டினார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்தக் கச்சேரியில் அனுராதா ஸ்ரீதர் வயலின் இசைத்தார். இவர் சிறந்த வயலின் வித்வான் என்று போற்றப்படும் லால்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் குடும்பத்தின் கலையை இவரும் இந்தக் கச்சேரியில் நிரூபிக்கவே செய்தார். ஸ்ரீராம் பிரம்மானந்தம் மிருதங்கமும், ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் கடமும் மிக அருமையாக வாசித்து, இந்தக் கச்சேரிக்கு மிகுந்த பலம் சேர்த்தார்கள். பதினான்கு வயதே நிரம்பிய பள்ளிச் சிறுமி அம்ருதவர்ஷினி முரளிகிருஷ்ணன் அந்த இனிய மாலைக் கச்சேரியில் தன் பிஞ்சுக் குரல் இனிமையால் கச்சேரிக்குப் பலம் சேர்த்தார். ரோஸ் முரளிகிருஷ்ணனின் மகளான வர்ஷினி, மிகச் சிறந்த முறையில் தனியாகவும் பல கச்சேரிகளை நிகழ்த்தியிருப்பதோடு, பல இசை 'ஆல்பம்'களிலும் பாடியிருக்கிறார். அர்ச்சனா பிரகாஷ¥ம், லதா ரகுநாதனும் மாறி மாறி கச்சேரிக்குத் தம்பூரா வாசித்தார்கள். கச்சேரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.எம்.சி. மாதவன் அவர்கள் குறிப்பிடும்போது, மூன்று மணிநேரத்தையும் இந்த இசைக் கச்சேரி மெய்மறக்கச் செய்தது என்றார். மேலும் அவர், இந்த இசைக் கச்சேரி காதுக்கு மட்டும் அளிக்கப்பட்ட விருந்தல்ல, இங்குக் கூடியிருப்போர் அத்தனை பேரின் ஆன்மாவிற்கும் அளிக்கப்பட்ட விருந்து என்றார்.
இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களில், ஒதுக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி நலனுக்காக, 501 C (3)ன் படி பதிவு செய்யப்பட்டு சுய லாபம் கருதாமல் லாஸ் ஏஞ்சல்ஸில் இயங்கிவரும் ஆஷா L.A.யின், கல்விக்காக செயல்பட்டுவரும் கிளை தான் இந்தக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான அளவில் இந்தக் கச்சேரி நிதி சேகரித்துக் கொடுத்த காரணத்தினால் சந்தோஷத்தின் உச்சிக்கே போயிருக்கிறார்கள் ஆஷா. இதற்கு முன்னாலும் சித்ரவீணா ரவிகிரன், விஷ்வமோகன் பாட், செஷாங்கின் புல்லாங் குழல், என். முரளிகிருஷ்ணனின் வீணைக் கச்சேரி போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக் கிறார்கள். campus program committee of the programs activities board of UCLA, முழுமையாக இந்த நிகழ்ச்சி நடத்துவதற்குப் பண உதவி செய்திருந்தது. வந்திருந்த அத்தனை பேருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

ரோஸ் முரளிகிருஷ்ணன்: இசைத்துறையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ரிஷி வேலி பள்ளியில் இசை ஆசிரியராகப் பணியில் இருந்தபோது, மிகச் சிறந்த கர்நாடக இசைப் பாடகி Dr. M.L. வசந்த குமாரி அவர்களிடம் குரல் பயிற்சி மேற்கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சான்ஸ்கிரிட் உட்பட பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் இவர் பாடல்களைப் பாடியிருக்கிறார். இவரது பாடல்கள், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, அமெரிக்கா, மற்றும் பல ஆசிய நாடுகளிலும் பிரசித்தி பெற்றவை. நிறைய இசைக்கச்சேரிகளையும், நாட்டிய நாடகங்களையும் இவரை வடிவமைத்து அரங்கேற்றியிருக்கிறார். இவருடைய நிகழ்ச்சிகள் இந்தியத் தொலைக்காட்சியிலும், அகில இந்திய வானொலியிலும் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகின்றன. 'ஸ்ரீருங்காரம்', ஸ்பிரிங் நெக்டார் ப்ரொடக்ஷனச்க்காக 'ஸ்ரீகணேஷா சமர்ப்பணம்', போன்றவை 1992ல் வெளிவந்த இவரது மிகப் பிரபலமான கர்நாடக இசைத்தொகுப்புகள்.

உலகம் முழுதும் பல இடங்களில் ரோஸ் முரளிகிருஷ்ணன் இசைக் கச்சேரி நிகழ்த்தி பெரும் பாராட்டைச் சம்பாதித்து வைத்திருக் கிறார். தன் கணவர் முரளிகிருஷ்ணனின் ஆதரவோடு அமெரிக்க மண்ணில் இந்திய இசையையும், கலாசாரத்தையும் வளர்க்க விரும்பி முயற்சி மேற்கொண்டார்கள். சர்வதேச அளவிலான மிகப் பெரிய இசை விழாக்களில் (Music Academy of the West, the Center for Jazz, World Music Festival, CSU San Marcos International Music Festival, UCSB's Day of Music, to name a few festivals in USA) கலந்து கொண்டார். UCLA, SDSU, UCSD, USC, UCLB, UCSB, Carpenter's Performing Arts Theater, Torrance performing Arts theater, Salk Institute of San Diego உட்பட இவர் இசை முழங்காத அரங்குகளே இல்லை எனலாம். இந்திய இசையை வளர்ப்பதற்காக இந்தியாவிலும் அமெரிக்காவிலும், கோயில்கள் மற்றும் பள்ளிகளில் இசைச் சேவை செய்துவருகிறார்.

2000ல் LAல் நடந்த A. R. ரஹ்மானின் கச்சேரியில், ரோஸ் முரளிகிருஷ்ணனும், இசைச் சங்கத்தைச் சேர்ந்த இவரது சிஷ்யர்களும் 'வந்தே மாதரம் மற்றும் தேசியகீதம் ' ஜனகன மன'' பாடல்களைப் பாடுவதற்கு சிறப்பு விருந்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லலிதா ஆனந்த்
More

க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
Share: 




© Copyright 2020 Tamilonline