Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோரில் முதியோர் தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி வருடாந்திரச் சுற்றுலா
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இரண்டாவது பாபநாசம் சிவன் விழா
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
அலபாமா தமிழ்ச் சங்கம் தமிழர் கொண்டாட்டம் 2009
- மகேந்திர மாதவன்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeமே 2, 2009 அன்று அலபாமா தமிழ்ச்சங்கம் ‘தமிழர் கொண்டாட்டம் 2009' விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. பர்மிங்கம் இந்து ஆலயத்தில் நடந்த இந்த விழாவிற்கு மொண்ட்காமரி, பஸ்கலூஸ், ஹண்ட்ஸ்வில் போன்ற இடங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வந்து கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமியர் நடனம் முதல் வாலிபர்கள் சிலம்பாட்டம் வரை அனைத்தும் சிறப்பம்சங்களாக விளங்கின.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. குத்துவிளக்கு ஏற்றப்பட்ட பின் ஏ.ஆர். ரஹ்மானின் ‘தமிழா தமிழா' பாடல் முழங்கியது. முதலில் சிறுவர் சிறுமியர்கள் பாடல், கிடார், வயலின், திருக்குறள் கூறுதல் என்று பலவிதத் திறமைகளைக் காண்பித்தனர். பின்னர் ‘சின்ன சின்ன ஆசை', ‘ஊ லலலா..', ‘ஹம்மா... ஹம்மா...' போன்ற பாடல்களுக்கு நடனமாடினர். அடுத்து ‘முனைவர் சம்பந்தம் விருது' அறிவிக்கப்பட்டது. முனைவர் சம்பந்தம் அலபாமா தமிழ்ச் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து தொண்டாற்றி அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது நினைவாக ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ச் சங்கத்திற்குத் தன்னலம் கருதாது தொண்டாற்றும் ஒருவருக்கு அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அவ்விருதினைப் பெற்றவர் முனைவர் கலைமுகிலன். உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் முகிலன், கடந்த 20 ஆண்டுகளாக அலபாமாவில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மலேசியத் தமிழர்.
தொடர்ந்து வாலிபர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதலில் ‘அல்லி தர்பார்' என்ற நகைச்சுவை நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஐந்து நிமிடங்களில் அனைவரது உள்ளங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ‘க ம க' இசைக்குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நலிந்து வரும் கிராமியக் கலைகளை வெகு அழகாக நடனமாடினார்கள். இதையடுத்து நடைபெற்ற சிலம்பாட்டம் மிகச் சிறப்பு. கூடியிருந்த அனைவருக்கும் வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அதனைச் செய்து காட்டினார்கள். அடுத்ததாக UABயில் பணிபுரியும் தமிழர்களின் தயாரிப்பான 'UABயில் கோவலன்' என்ற நகைச்சுவை நாடகம் பார்வையாளர்களின் வயிற்றைப் புண்ணாக்கியது. தொடர்ந்து வந்த மொண்ட்காமரி தமிழர்களின் பாம்பு நடனம் மற்றும் நாட்டுப்புற நடனம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களுடன் விழா நிறைவு பெற்றது. அலபாமா தமிழ்ச் சங்கத் தலைவர் வெங்கடேசன் அவர்களும், குழு உறுப்பினர்களும் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விதம் பாராட்டத்தக்கது.

மகேந்திர மாதவன்,
அலபாமா
More

லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோரில் முதியோர் தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி வருடாந்திரச் சுற்றுலா
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இரண்டாவது பாபநாசம் சிவன் விழா
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline