Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
மிச்சிகன்: உன்னிகிருஷ்ணன் இசையோடு ஓவியம்
சாத்தூர் ஏ.ஜி. சுப்ரமணியம் நூற்றாண்டு விழா
லிவர்மோர் ஆலயம்: கைலாச வைபோற்சவம்
சங்கர நேத்ராலயா: எம்.எஸ். நூற்றாண்டு இசை நிகழ்ச்சி
TNF - ஒஹையோ; நெடுநடை 2016
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் வட அமெரிக்க நிகழ்ச்சிகள்
- செய்திக்குறிப்பிலிருந்து|ஜூன் 2016|
Share:
2016 ஜூன் 24 தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதிவரை வேளுக்குடி ஸ்ரீ. கிருஷ்ணன் சுவாமி அவர்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கனடாவிலுள்ள டொரான்டோவுக்கும் செல்கிறார். உபன்யாசம் நடைபெறும் இடம், தேதி ஆகியவை கீழே:

இடம்தேதி
பாஸ்டன்ஜூன் 24 - ஜூன் 28
டொரான்டோஜூன் 29 - ஜூலை 2
சியாட்டில்ஜூலை 3 - 7
சான் ஃபிரான்சிஸ்கோஜூலை 8 - 13
பிரத்யக், சான் ஃபிரான்சிஸ்கோஜூலை 9
லாஸ் ஏஞ்சலஸ்ஜூலை 14 - 16
ஹூஸ்டன்ஜூலை 17 - 19
டாலஸ்ஜூலை 20, 21
பிட்ஸ்பர்க்ஜூலை 22 & 23
டெட்ராயிட்ஜூலை 23 - 26
இண்டியானாபொலீஸ்ஜூலை 27
சிகாகோஜூலை 28 - 30
கேரிஜூலை 31 - ஆகஸ்ட் 2
வாஷிங்டன் டி.சி.ஆகஸ்ட் 3 - 6
நியூ யார்க், நியூ ஜெர்சிஆகஸ்ட் 7 - 8
லண்டன், UKஆகஸ்ட் 11 - 14


வேளுக்குடி ஸ்ரீ. கிருஷ்ணன் சுவாமி அவர்கள் ஆண்டில் சுமார் நானூறு உபன்யாசங்கள் நிகழ்த்துகிறார். சுமார் இருனூறு நாட்கள் பல இடங்களுக்குச் சென்று உபன்யாசங்கள் செய்கிறார். அவர் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்த ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. தன் தந்தையையே குருவாகக் கொண்டு, அவரிடம் ஶ்ரீமத் பகவத்கீதை, நாலாயிர திவ்யப்ரபந்தம், ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம் ஆகியவற்றைக் கற்றார். சார்ட்டர்ட் அக்கவுன்டன்டாக இருந்தவர், தந்தையார் மறைந்த பிறகு, ஆன்மிகத்துக்குள் முழுவதுமாக ஈடுபட்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபன்யாசங்களை இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நிகழ்த்தியுள்ளார். அவரது உபன்யாச சி.டி.க்கள் நானுறுக்கும் மேல் உள்ளன. 'கண்ணனின் முகங்கள் ஏழு', 'நான் கண்ட நல்லது' என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 'கிஞ்சித்காரம்' என்ற தொண்டுநிறுவனம் அமைத்து அதன்மூலம் பல நற்பணிகளைச் செய்துவருகிறார்.
'வேதிக்ஸ்' தொண்டு நிறுவனம் அமெரிக்காவின் ஓவ்வொரு மாநிலத்திலும் இயங்குகிறது. இதன் தன்னார்வலர்கள் இந்தியாவிலுள்ள மக்கள்நலனுகாகச் சேவைகளைச் செய்து வருகின்றனர். சமீபத்தில் தமிழ் நாட்டில் சில பகுதிகள் மழை பேரிடரால் பாதிக்கப்பட்டபோது வேதிக்ஸ் தன்னார்வலர்கள் மக்களுக்கு,எண்ணிலடங்கா வழிகளில் கைகொடுத்து உதவினர். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து சேவை செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட வலைதளத்தைப் பார்க்கவும். மேலும் விவரங்களுக்கு: vedics.org

செய்திக்குறிப்பிலிருந்து
More

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
மிச்சிகன்: உன்னிகிருஷ்ணன் இசையோடு ஓவியம்
சாத்தூர் ஏ.ஜி. சுப்ரமணியம் நூற்றாண்டு விழா
லிவர்மோர் ஆலயம்: கைலாச வைபோற்சவம்
சங்கர நேத்ராலயா: எம்.எஸ். நூற்றாண்டு இசை நிகழ்ச்சி
TNF - ஒஹையோ; நெடுநடை 2016
Share: 




© Copyright 2020 Tamilonline