Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
தி.க.சிவசங்கரன்
குஷ்வந்த் சிங்
- |ஏப்ரல் 2014|
Share:
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் காலமானார். பிப்ரவரி 2, 1915ல் பஞ்சாபின் ஹடாலியில் பிறந்த சிங், லாகூரில் கல்விப் படிப்பை முடித்தார். லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் சட்டக்கல்வியை முடித்தபின் லாகூரில் வழக்குரைஞராகச் சில காலம் பணி புரிந்தார். தொடர்ந்து கனடாவின் டொரண்டோ நகரில் இந்திய அரசின் தகவல்தொடர்புத் துறை அதிகாரியாகவும், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியாகவும் பணியாற்றினார். பின் ஆர்வத்தால் அகில இந்திய வானொலியில் செய்தியாளராகச் சிலகாலம் இருந்தார். அந்த அனுபவத்தைக் கொண்டு 1951ல் 'யோஜனா' என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார். 'இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா' வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி அந்த இதழை நாட்டின் மிக அதிகம் விற்கும் வாராந்தரிகளில் ஒன்றாக்கினார். பின்னர் 'நேஷனல் ஹெரால்ட்', 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

குஷ்வந்த் சிங்கிற்கு 1974ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. கடவுள் நம்பிக்கையற்றவரான போதும், 1984ல் பொற்கோவிலுக்குள் பிரதமர் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பியதைக் கண்டித்து அவ்விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இந்திரா காந்தி அவசரநிலை அறிவித்து பத்திரிகைத் தணிக்கை கொண்டுவந்த போது இவர் அதை எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பிற்காலத்தில் இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக 2007ல் பத்மவிபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
கடவுள், காதல், காமம், அரசியல், கவிதை, கலை என்று பல களங்களிலும் சர்ச்சைக்குரிய தனது எழுத்துக்களால் பலரது கவனம் கவர்ந்த சிங், தனது நாவல் மற்றும் கட்டுரைகளால் புகழையும், இகழையும் எதிர்கொண்டார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து இவர் எழுதிய Train to Pakistan என்ற நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. I shall not hear the Nightingale, The voice of God and other stories, The Mark of Vishnu and other stories, The Fall of Punjab, The Tragedy of Punjab, The History of Sikhs போன்ற இவரது நூல்கள் முக்கியமானவையாகும். The Company of Women போன்ற சர்ச்சைக்குரிய படைப்புகளையும் தந்திருக்கிறார். Gods and Godmen of India என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. 2010ல் வெளியான The Sunset Club என்ற நூலைத் தொடர்ந்து 2012ல் வெளியான Khushwantnama: The Lessons of My Life என்பதுதான் அவருடைய கடைசி நூலாகும். மனைவியை இழந்த குஷ்வந்த் சிங்கிற்கு ராகுல் சிங் என்ற மகனும், மாலா என்ற மகளும் உள்ளனர்.
More

தி.க.சிவசங்கரன்
Share: 




© Copyright 2020 Tamilonline