Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
FeTNA வெள்ளி விழா
மிருத்திகா செந்தில்: கிடார் சாதனை
- |ஆகஸ்டு 2012|
Share:
மிச்சிகனின் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் நகரத்தைச் சேர்ந்த மிருத்திகா செந்தில், அமெரிக்கன் கில்ட் ஆஃப் மியூசிக் (AGM) நடத்திய போட்டிகளில் கிடார் வாத்தியத்தில் தான் பங்கேற்ற நான்கு பிரிவுகளிலும் கோப்பையை வென்றுள்ளார்! Length of Study, Test List, Age Achievement பிரிவுகளில் முதல் பரிசையும், Pop பிரிவில் இரண்டாவது பரிசையும் வென்றார். 7 வயதான தமிழ்வழி வந்த மிருத்திகா, தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், கிடார் (Guitar) வரிசையில், இளம் பங்கேற்பாளர் என்பதும் குறிப்பிடதக்கது. தேசிய அளவில் தலைசிறந்த கிடார் மாணவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.

பழமை வாய்ந்த சர்வதேச இசையமைப்பான அமெரிக்கன் கில்ட் ஆஃப் மியூசிக், தனது 111வது தேசிய அளவிலான இசை மாநாடு மற்றும் போட்டிகளை, ட்ராய் (டெட்ராயிட்) நகரத்தில் ஜூலை 19 முதல் ஜூலை 22 வரை நடத்தியது. போட்டியில் 500 மாணவர்கள் கிடார் உட்படப் பலவகை இசைக்கருவிகளுக்கான இரண்டாயிரம் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்றனர்.
மிருத்திகா இசைத்துறையில் இன்னும் பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்!
More

FeTNA வெள்ளி விழா
Share: 




© Copyright 2020 Tamilonline