Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஜூலை 2008: குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|ஜூலை 2008||(1 Comment)
Share:
Click Here Enlargeஜூன் 2008 புதிரில் "படு மட்டம் ?(2)" என்ற குறிப்பிற்கு "கிட" என்ற விடை சிலரிடமிருந்து வந்தது. சிலருக்கு இதற்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. இதற்கான விடை "கிடை". கிடை மட்டம் என்பது ஆங்கிலத்தில் horizontal level என்பதற்கு இணையான சொல். (மட்டம் என்றால் level). அறிவியல் பாடப் புத்தகங்களில் இச்சொல்லைப் புழங்குகிறார்கள். படுத்திருக்கும்போது கிடையாக இருப்பதால் இக்குறிப்பு ஓரளவு பொருத்தமென்று நம்புகிறேன். மற்றொரு குறிப்பு 13. வாகீசர். இது திருநாவுக்கரசருக்கு மற்றொரு பெயர். "சிவகாமியின் சபதத்தைப்" படித்தவர்களுக்கு இது எளிதில் தோன்றியிருக்கும். இவர் சுந்தரர், சம்பந்தரோடு சேர்த்து சைவ சமயக் குரவர் எனப்படுவதால் குறிப்பை அப்படி எழுதியிருந்தேன்.

உங்களில் யாராவது புதிரையமைக்க முன்வந்தால் இதுபோன்ற என்னுடைய பழங்காலப் பித்திலிருந்து விடுபட்ட, வேறுவிதமான புதுமையான புதிர்களை உருவாக்க முயலும் என்று நம்புகிறேன்.

இணையத்தில் வலைப்பதிவுகளில் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்திப் பினாத்தல் சுரேஷ் என்பவர் (penathal.blogspot.com) புதுவிதமாகச் செய்து வருகிறார். இலவசக் கொத்தனாரும் பல புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார். (elevasam.blogspot.com). தென்றல் வாசகர்களிலும் பலரும் ரசிக்கும் வண்ணம் திறமை கொண்ட படைப்பாளிகள் இருக்க வேண்டும். வெளியே வாருங்கள்!

vanchinathan@gmail.com

குறுக்காக
3. பசும்பொன் மனதில் குறை? (5)
6. யோசித்து ஓரிடத்தில் இருந்துவிட்டு யமுனைத் தொடக்கத்தைச் சூழ் (4)
7. போய்ச் சேர்ந்த பின் தரப்படும் கவளம் (4)
8. நூலுக்கு ஆதாரம் அவ்விதம் சம்பளத்தில் ஒரு பகுதியாகும் (6)
13. பாரியை நடக்க வைத்த தாவரம் (6)
14. குறையான தானியம் செயல் பெண்ணெடுப்பது (4)
15. கட்டிக்கொள்ள நறுமணக் கயிற்றில் தேடு (4)
16. தலையில் இருப்பது என்ன என்று கேட்க இயலவில்லை (4)

நெடுக்காக
1. பல் பூச்சரம் (5)
2. விஷ்ணுவின் கைப்பொருள் கலங்கிட அதிகம் கதியில்லாப் பாகனிடம் இருக்கும் (5)
4. ஒருவருக்குச் சொந்தமான யானை ஒருபைசாவுக்கு பல உண்டா? (4)
5. கழுத்து வெண்ணிறமென்பதால் நீலக்கழுத்துவாசிக்கு ஆகாதோ? (4)
9. முத்தான கல் (3)
10. இந்தக் கணம் விந்தியமலைக்கும் இலங்கைக்குமிடையே உள்ளது (5)
11. கடைசி முதல் இறுதியாகத் தாக்க, கட்டிடத்திற்குத் தொடக்கம் (5)
12. தடுமாறிக் கள்ளால் (கல்லெறிந்து) வெளியே வீங்கு (4)
13. முயன்று பரிந்து குதிரையோட்டத்திற்கு முன் நுனி (4)
நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜூலை 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com.


ஜூன் 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

Share: 




© Copyright 2020 Tamilonline