Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
வார்த்தை சிறகினிலே
வார்த்தை சிறகினிலே
- அரவிந்த்|மே 2008|
Share:
Click Here Enlargeதமிழகத்தில் நாடகக் கலைக்காக நாடகக் கலைஞர்கள் மட்டும்தான் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாடக அரங்கத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடகக்கலை மிகச் சிறப்பாக இருந்த தமிழகத்தில்தான், அந்தக் கலைக்கு பெரிய வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. நாடகம் போட்டே பலர் நஷ்டமடைந்து விட்டனர்.
எஸ்.வி.சேகர்

******


வீட்டைவீட்டு வெளியில் செல்லும்போது, மின் விளக்குளை அணைத்து விட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது தேவையே இல்லாமல் அனைத்து விளக்குகளையும் எரிய விடுவதுதான் 'பேஷன்' என்றாகிவிட்டது.
மன்மோகன் சிங்

******


சமுதாயத்தால், அரசாங்கத்தால், வறுமையால் விரட்டப்பட்டவர்கள் நாங்கள். அந்த மிரட்டலுக்கும் ஈடு கொடுத்து, எழுதப் படிக்கத் தெரியாத தன் பலவீனத்தையும் வெற்றி கொண்டு, என்னை அந்தத் துயர வெள்ளத்தில் மூழ்கிவிடாதபடி மேலே கொண்டு வந்து விட்டவர் என் தாய்.
கவிஞர் வைரமுத்து

******
நான் அன்றாடம் சந்திக்கும் மக்களை கவனித்து அவர்களிடமிருந்து தான் நடிப்பைத் திருடுகிறேன்.
கமல்ஹாசன்

******


'டான்ஸ் ஷோ’ என்ற பெயரில் ஜோடி ஜோடியாகப் போடும் அந்த நடனக் குத்தாட்டத்தை விட ஆபாசமான, அருவருப் பான விஷயம் உண்டா? மன வக்கரிப்புக்கு ஆளானவர்கள், முக்காடு போட்டுக் கொண்டு திருட்டுத்தனமாகப் பார்த்து ரசித்த ரெக்கார்டு டான்ஸ¥களை வீட்டு வரவேற்பறைக்குக் கொண்டு வருவதற்கா சேட்டலைட் புரட்சி?
தமிழருவி மணியன், தமிழகத் திட்டக் குழு உறுப்பினர்

******


அமெரிக்க சினிமாக்களில் காணப்படும் செக்ஸ், வக்ரம் போன்றவற்றை அப்படியே தமிழ் சினிமா எடுத்துக் கொள்கிறது. இதுவே ஐரோப்பிய சினிமாவைப் பின்பற்றுமானால் கலாசாரம், சித்தாந்தம் போன்றவற்றைத் தமிழ் சினிமா வெளிப்படுத்தக் கூடும்.
சாரு நிவேதிதா, எழுத்தாளர்

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline