Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
பொது
மிச்சிகனில் தமிழ் வகுப்பு: குறிப்பு
தென்றல் வாசகர்களுக்கு,
- |ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeவணக்கம்.

அக்டோபர் தென்றல் இதழில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் பெரு முயற்சியால் வெளி வர இருக்கும் இயற்பியல் ஒளி-ஒலி பெருந்திட்டத் தொடரைப் பற்றிய அறிமுகம் வெளி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அதன் வளர்ச்சி பற்றிய செய்திகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தென்றல் ஆசிரியர் அன்புக் கட்டளை இட்டுள்ளார்கள். அதன்படி பின் வரும் செய்திகளை வாசகப் பெருமக்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்:

இதுவரை மூன்று மாவட்டங்களி லிருந்து பள்ளிகளுக்கு நிது உதவி கிடைத்திருக்கிறது.

இதுவரை 26 மணி நேர இயற்பியல் DVD பாடம், தமிழில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு விட்டன. இதனை பிரதி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எழுதிய இரண்டு துணைப் பாட நூல்கள் (1500 பக்கம்) தமிழில் மொழி ஆக்கம் செய்யப்பட்டுவிட்டன. இனி அதை அச்சுக்கு அனுப்புவதே பாக்கி.

இதுவரை கீழ்காணும் புரவலர்கள் ஒரு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தந்து இத்தொடரைத் திரையிட பள்ளியைத் தத்து எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
1. சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளி - கண்டனுர்.
புரவலர் - திரு ராம் ராமனாதன் திருமதி உன்னா ராமனாதன், சவுதி அரேபியா.

2. SMS உயர் நிலைப்பள்ளி மற்றும் பல கரைக்குடி நகர் பள்ளிகள்.
புரவலர் - திரு சின்காரம் திருமதி வாசுகி. இவர்கள் LCD Projector மூலம் பள்ளிக்கு பள்ளி சென்று திரையிட முன் வந்துள்ளார்கள்.

3. AC உயர்நிலைப் பள்ளி - பள்ளத்தூர்.
புரவலர் - திரு கே எம் சிடி நாராயணன் திருமதி வசந்தா, சென்னை.

4. சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 10 பள்ளிகள்
புரவலர் - மாண்புமிகு அமைச்சர் திரு பா. சிதம்பரம்

5. AGN உயர்நிலை பள்ளி - ஓமலூர்.
புரவலர் - திரு ஆயிக் கவுண்டன் தம்பதிகள், சென்னை.

6. திரு. ம.ந.கிருட்டிணன் தம்பதிகள், நியூயார்க் 5000 டாலர்கள் நன்கொடை தந்து உதவியுள்ளார்கள்.

7. திரு. சிதம்பரம் திருமதி சோனாலி சிதம்பரம், சான் பிரான்சிஸ்கோ 5000 டாலர்கள் நன்கொடை தந்து உதவி யுள்ளார்கள்.

8. திரு. குமார் வெங்கட் திருமதி பார்வதி வெங்கட், இண்டியானா 5000 டாலர்கள் நன்கொடை தந்து உதவியுள்ளார்கள்.

9. தமிழ்நாடு கல்வித்துறை அதிகாரி களோடு தொடர்பு கொண்டு அவர் களது ஒத்துழைப்பைக் கோரியுள்ளோம்.

மீண்டும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுகிறேன்.

அழகப்பா ராம்மோகன்
இயக்குநர், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை.
More

மிச்சிகனில் தமிழ் வகுப்பு: குறிப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline