Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் வழங்கும் 'பிரம்ம ரிஷி' நாடகம்
ரஷ் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் வசந்த விழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் ஆண்டு விழா
மார்கழி ராகம் ஒரு புதிய திரையனுபவம்
- |மே 2009|
Share:
Click Here Enlargeபட்டுப்புடவை, நகைகள், ஒளி நிரம்பிய அரங்கம் இவற்றோடு தொடர்புப்படுத்தி எண்ணப்படுவதுதான் கர்நாடக இசைக் கச்சேரி. மாறாக, இருண்ட அரங்கம், செவியை நிரப்பும் டிஜிடல் சூழிசை, பெரிய திரையில் கைதேர்ந்த கேமரா வல்லுனரின் பார்வையில் பாடகர்களின் பேருருவங்கள் - என்று எண்ணிப் பாருங்கள். இதுதான் மார்கழி ராகம்.

கச்சேரி இங்கே ஹைடெக் திரைப்படமாகி இருக்கிறது. இந்த முதன்முதல் ‘கச்சேரி மூவி'யைத் தயாரித்தவர் ஜயேந்திர பஞ்சாபகேசன். இதற்கான 6-டிராக் இசையைப் பதிவு செய்தவர் எச். ஸ்ரீதர். எல்லாவற்றுக்கும் மேலாக வெகுநவீன Red 4K கேமராக்களில் இதனைப் படம் பிடித்தவர் பி.சி. ஸ்ரீராம். இவர்களது உயர் தொழில் நுட்பத்தில் பதிவானது அருணா சாய்ராமும் டி.எம். கிருஷ்ணாவும் வழங்கும் கர்நாடக இசை.

ஏப்ரல் 24 அன்று சான் பிரான்சிஸ்கோவின் டோல்பி லேப்ஸ் அரங்கில் ‘மார்கழி ராகம்' கச்சேரி மூவியின் முதல் காட்சியைப் பார்த்தவர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர் என்றால் மிகையல்ல. “நான் கேட்ட அற்புதமான கச்சேரி இதுதான்! நான் இசை கற்றிருக்கிறேன். என் பயிற்சியைத் தொடரப் போகிறேன். இந்தப் பகுதியில் யாராவது கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களா?” என்று ஓர் இளைஞர் படம் முடிந்ததும் வந்து கேட்டார்.

இந்த ஒலி, ஒளி இசையனுபவத்தைப் பெற இன்னும் வாய்ப்புகள் உள்ளன. இதோ இங்கே:

மே 16, 2009, மதியம் 1:00 மணி, Norwalk8 theatre, Los Angeles, CA.
மே 16, 2009, மதியம் 1:00 மணி, டல்லாஸ்
மே 29, 2009, மாலை 7:00 மற்றும் 9:30 மணி, Dolby Labs Theater, New York City.
மே 31, 2009, காலை 11:00 மணி, Landmark Dobie, Austin, Texas.
ஜூன் 6, 2009 மதியம் 1:00 மணி, Movie City, Edison, NJ.
உங்கள் பகுதியில் ‘மார்கழி ராகம்' திரையிடுவது குறித்துத் தொடர்பு கொள்ள:
சுஜாதா சுரேஷ் - 408-772-2262; sujatha@akaarevents.com
அதிகத் தகவலுக்கு: அருணா பெரி - 408.718.5261; aruna.peri@gmail.com
மேலும் அறிய: www.margazhiraagam.com
More

மிச்சிகன் தமிழ்ச்சங்கம் வழங்கும் 'பிரம்ம ரிஷி' நாடகம்
ரஷ் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் வசந்த விழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline