Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
அக்டோபர் 2010: வாசகர் கடிதம்
- |அக்டோபர் 2010|
இந்தியாவிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள அமெரிக்காவில் தென்றல் மாதாந்திரத் தமிழ் இதழ் வெளிவருவது என் போன்றவர்களுக்கு ஒரு வரப்ரசாதம். பொழுதுபோக்கு என்பதோடு இல்லாமல், சிறந்த, உரிய, அரிய கருத்துக்களை அப்படியே தத்ரூபமாக தங்கள் தென்றல் இதழ் வெளிப்படுத்துகிறது. இதை நான் தாயகம் திரும்பியதும் எனது உறவினர் மற்றும் நண்பர்களோடு அவசியம் பகிர்ந்து கொள்வேன். வளர்க தமிழ். வீசட்டும் தென்றல்.

எஸ்.கல்யாணராமன்,
மாசிடோனியா, ஒஹையோ

***


விதவிதமாய்க் கவிதை எழுத
விருப்பம் இருக்குது - அப்படி
விரும்பியதை வடிப்பதற்கே
தாளும் இருக்குது

விரைவாக எழுதிடவே
மனதும் துடிக்குது - நாம்
எழுதியதை வெளியிடவே
’தென்றல்’ இருக்குது

கவிஞனைக் கை தூக்கிடவே
காத்துக் கிடக்குது - அந்த
எழுத்தாளனை ஏற்றிடவே
பார்த்து இருக்குது

நல்ல தமிழ் நெஞ்சங்களைக்
குளிர வைக்குது - நல்ல
நயமான எழுத்துக்களை
நாட வைக்குது

சொல்லச் சொல்ல அதன்
புகழை எழுதக் கூடுமோ - காலம்
செல்லச் செல்ல தென்றல் வீச
நெஞ்சம் வாழ்த்துது

சுபத்ரா பெருமாள்,
கூபர்டினோ, கலிபோர்னியா

***