Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
மாமழை
செல்வாக்கு
- பழமைபேசி|நவம்பர் 2013|
Share:
ஊரிலிருந்து வந்திருக்கும்
நேசந்தூவும் அம்மாவுக்கு
அப்படியொரு வரவேற்பு
ஆசியா மார்க்கெட்டில்!
கோவைக்காய் குவியலில்
தனக்குத்தான் பொறுக்கினாள்!

ஃபார் மீ டூ என்றாள் ஒருத்தி,
ஃபார் மீ டூ என்றாள் அடுத்தவளும்!

இப்படியாய்ப் பொறுக்கிக் கொடுத்து
வேண்டியோர் எல்லோருக்கும்
மனமாரப் பொறுக்கிக் கொடுத்து
விற்பனைப் பெருக்கத்துக்கு அடிபோட
அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு!

கேட்கிறது எட்டத்தில் நடக்கிற
தோழியுடனான அலைபேசிப் பேச்சு.
ஆமாம், இங்லீசு தெரீலீன்னாலும்
எம்மாமியாருக்கு இருக்கு செல்வாக்கு!
பழமைபேசி,
கோலியர்வில், டெனஸி
More

மாமழை
Share: 




© Copyright 2020 Tamilonline