Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர்
சங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்
வினித்ரா சுவாமி
- மீனாட்சி கணபதி|மே 2013||(1 Comment)
Share:
உயர்நிலைப் பள்ளிகளுக்கான கூகிள் தூதுவர், எழுத்தார்வம் கொண்டவர், குறும்படத் தயாரிப்பாளர், அமெரிக்கச் சிறுமியர் சாரணர்படை உறுப்பினர், California Scholarship Federation (CSF), National Honor Society (NHS) இவற்றின் உறுப்பினர், ஹாக்கி விளையாட்டு வீரர் - இது ஏதோ ஒரு குழு உறுப்பினர்களைப் பற்றிய வர்ணனை என்று நினைத்துவிடாதீர்கள். ஒட்டுமொத்தமாக இவை வினித்ரா சுவாமியைக் குறிப்பவை!

வினித்ரா, மைக்கல் லீ (Michael Li), ஆஷ்லி ல்யூ (Ashley Liu) ஆகியோரைக் கொண்ட TINNOVATE அணி, கான்ராட் அவார்ட் இன்டர்நேஷனல் போட்டியில் (Cyber Technology and Security for the Spirit of Innovation Conrad Award International Challenge) இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது. 7 நாடுகளைச் சேர்ந்த 235 அணிகளில் இருந்து இந்த அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம். ஏப்ரல் 10 முதல் 13 தேதிவரை NASA வில் நடைபெற உள்ள இன்னோவேஷன் சம்மிட் போட்டியில் இவர்களது படைப்பு பார்வைக்கு வைக்கப்பட்டது. இவர்கள் உருவாக்கியுள்ள 'InVision' மௌன்டன்வியூவிலுள்ள Skybox Imaging நிறுவனத்தின் உயர்தர நேரலைப் படங்கள் மற்றும் விடியோக்களின் (high resolution live imagery and videos) உதவியோடு மோசமான நெரிசலான சாலைகளை அடையாளம் கண்டு மாற்றுவழியை வாகன ஓட்டிகளுக்குச் சொல்லும். இதில் சேகரிக்கப்படும் தகவல், நகரசபைகள் சாலைப் போக்குவரத்துப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.

கூப்பர்டினோ மேல்நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவியான வினித்ரா பள்ளி மாணவிகளிடையே கணினித் தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் ஆர்வத்தை வளர்ப்பதற்கான கூகிள் தூதுவர். இவர் டிசம்பர் 2012ல் தன் பள்ளியில் கூகிள் பொறியாளர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். எழுத்தார்வம் கொண்ட இவர் 7ம் வகுப்பு முதல் இதழியல் படித்துவருகிறார். Lawson Middle School Student Publication, மற்றும் கூப்பர்டினோ நடுநிலைப் பள்ளியின் பத்திரிகையான Prospector ஆகியவற்றிலும் நிறைய எழுதிவருகிறார். பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் CEEF (Cupertino Education and Endowment Fund) அமைப்பின் பாராட்டுதலைப் பெற்றுள்ளன. PTA நடத்திய Reflections Contest புகைப்படப் போட்டியிலும் பரிசுகள் வென்றுள்ளார்.
சாரணர் இயக்கத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக உறுப்பினர். பல சாரணர் முகாம்களில் பங்கேற்றதோடு, அவற்றை நடத்துவதிலும் உதவி புரிந்துள்ளார். அமெரிக்க சாரணர் அமைப்பின் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பரிசுகளை வென்றுள்ளார். தான் பிறந்த சிலிக்கான் பள்ளத்தாக்கின் வெவ்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் இவரது நிகழ்ச்சிக்கு வெள்ளிப் பரிசு (Silver Award) கிடைத்தது. 12 தேசங்களின் கலாசாரம், மொழி, உணவு, இசை, விளையாட்டுக்கள், பூகோளம் ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் சிறப்பாக வழங்கியிருந்தார். தற்சமயம் தங்கப் பரிசைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தன் பகுதி முதியோர்களிடையே மின்னஞ்சல் பயன்படுத்துதல் போன்ற அடிப்படைக் கணினி அறிவைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் FBLA (Future Business Leaders of America) அமைப்பில் அதிகாரி. இதன் Bay Section போன்ற போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். மார்ச் 2013ல் இவர் கூப்பர்டினோ மற்றும் சன்னிவேல் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு Pseudo Bay Section நிகழ்ச்சியை நடத்திப் பாராட்டுப் பெற்றார். இவர் விளையாட்டுத் துறையையும் விட்டு வைக்கவில்லை. ஜூனியர் வெர்ஸிடி ஃபீல்டு ஹாக்கி அணியின் கோல்கீப்பர் இவர். இந்த அணி 2012ம் ஆண்டு பல வெற்றிகளைக் கண்டுள்ளது. கூப்பர்டினோ உயர்நிலைப் பள்ளி இவருக்கு Scholor Athlete விருது வழங்கியுள்ளது.

தனது வெற்றிக்கு, குடும்பத்தினரது ஆதரவும், சரியான கால மேலாண்மையும், கடவுள் பக்தியும் காரணம் என்கிறார் இவர். தன் பகுதி கோவிலில் பஜனைப் பாடல்கள் பாடும் இவர், பிரார்த்தனை தனக்கு தன்னம்பிக்கை அளிப்பதோடு சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற உதவுவதாகக் கூறுகிறார்.

மீனாட்சி கணபதி
More

மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர்
சங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்
Share: 




© Copyright 2020 Tamilonline