Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
- |ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeஏப்ரல் 23 முதல் 28 வரை ·ப்ரீமான்ட், கலி·போர்னியாவைச் சேர்ந்த ஸ்ருதி ஸ்வர லயா குழுவினர் 'சங்கீத சிக்ஷா' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இசையார்வம் உள்ள மாணவர்களுக்குக் கற்றுத்தரவும், ஏற்கனவே அறிந்தவர்கள் மேலும் இசை நுணுக்கங்களை பற்றி விரிவாக அறியச் செய்வதும், வளர்ந்து வரும் இசைக் கலைஞர்கள் மேலும் தங்களை வளர்த்துக் கொள்ளவும் உதவுவதும் 'சங்கீத சிக்ஷா'வின் நோக்கங்களாகும்.

இதில் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை யில் விருது பெற உள்ள சித்ரவீணை நரசிம்மன் அவர்கள் கலந்து கொள்கிறார். அனைவருக்கும் இசையைக் கற்றுத்தர வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள இவர், வாய்ப்பாட்டுக் கச்சேரியிலும், சித்ரவீணை இசைப்பதிலும் தேர்ந்தவர். கர்நாடிகா பிரதர்ஸ் எனப்படும் ரவிகிரண், சசிகிரண் போன்றோரின் குரு. லயத்திலும் தேர்ந்தவர். இவர்களுடன் www.carnatica.net இணையதள நிறுவனர்களின் ஒருவரும், இசை நுணுக் கங்கள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவரும், வெளிநாடுகளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்திப் புகழ்பெற்றவருமான கே.என். சசிகிரணும் கலந்து கொள்கிறார்.

வாய்ப்பாட்டு மற்றும் சித்ரவீணை இசைக் கலைஞரான பி. கணேஷ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். சிறந்த இசை அமைப்பாளரான இவர், செல்பேசிகளுக்கான சிறப்பு இசைக் கோர்வைகளை வடிவமைத்திருக்கிறார். நாகை முரளிதரனின் மருமகனான ஸ்ரீராம், பிரபல மிருதங்கக் கலைஞரான தஞ்சாவூர் முருகபூபதி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்தப் பயிலரங்கில் கர்நாடக, மெல்லிசை மற்றும் பக்திப் பாடல்களுக்கான குரல்வளத் தேர்வு, அதன் நுணுக்கங்கள் பற்றியும், அபூர்வ கிருதிகள், வர்ணங்கள் பற்றியும் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் விதம், தயாரிக்கும் முறை என அனைத்திலும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழிசை பற்றியும், பல்லவி அமைத்தல், ரசிகர்களுக்கேற்றவாறு பாடுதல் போன்றவை பற்றிய பயிற்சியும் நிகழ்ச்சியில் உண்டு. இது தவிர, லயம், கொன்னக்கோல், மிருதங்கம், வயலின் போன்றவை அனைத்துக்கும் ஆரம்பநிலை மாணவர்கள் முதல் பயிற்சிபெற்றோர் வரை என அனைவருக்கும் தனித்தனியாகச் சிறப்புப் பயிற்சிகள், அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞர்களின் மூலம் அளிக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 27 அன்று கர்நாடிகா பிரதர்ஸ் குழுவினருடன் இணைந்து மாணவர்கள் பங்குபெறும் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி: 'சங்கீத சிக்ஷா'
நாள்: ஏப்ரல் 23-28, 2007
ஏப்ரல் 23-27: மாலை 4-9 மணி வரை
ஏப்ரல் 28: காலை 9-12 மணி வரை

விவரங்களுக்கு: அனு சுரேஷ்: ggavimal@sbcglobal.net
More

புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
Share: 




© Copyright 2020 Tamilonline