Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
தியாக பிரம்ம ஆராதனை
புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்'
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா
ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
- லதா ஸ்ரீனிவாசன்|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeஜனவரி 7, 2006 அன்று கலிஃபோர்னியா மாநிலப் பல்கலை ஹேவர்ட் அரங்கில் குரு இந்துமதி அவர்களின் சிஷ்யையும், நிருத்யோல்லாசா அகாடமியின் மாணவியுமான ரஞ்சனி சுகுமாரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது.

இறைவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, புஷ்பாஞ்சலி மற்றும் 'நாரதகான' என்ற ஸ்ரீரஞ்சனி ராகப் பாடலுடன் களைகட்டத் தொடங்கியது.

ரஞ்சனியின் உழைப்பும், திறமையும் சுத்த சாவேரி ராக ஜதிஸ்வரத்திற்கு அவர் ஆடியதில் வெளிவந்தது. கமாஸ் ராக வர்ணத்தின் மூலம் அம்பாளின் பலவித அம்சங்களையும், ரூபங்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்தார். அடவுகள் அதற்கு மேலும் மெருகேற்றின. அவர் ஆடிய பதமோ ரசிகர்களின் ரசானுபாவத்தைத் தட்டி எழுப்பக் கூடியதாக அமைந்தது. ராமாயண நிகழ்ச்சிகளை நவரசத்தோடு அவர் வெளிப்படுத்திய விதம் நிகழ்ச்சிக்குச் சிகரம்.

காண்போர் கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது அவர் ஆடிய பாகேஸ்வரி ராக மீரா பஜன். ஒருதேர்ந்த கலைஞரின் லாகவத்தோடு கண்ணனும், ராதையும் கோபியருடன் கூடி பிருந்தாவனத்தில் நடத்திய ராசலீலையை நம் முன் நிகழ்த்திக் காட்டியது அருமை. முத்தாய்ப்பாக அமைந்தது மிஸ்ர சிவரஞ்சனியில் அமைந்த தில்லானா.

ஆஷா ரமேஷ் (குரலிசை), குரு இந்துமதி கணேஷ் (நட்டுவாங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு நல்ல பக்கபலம்.
லதா ஸ்ரீனிவாசன்
More

ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
தியாக பிரம்ம ஆராதனை
புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்'
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline